தஞ்சாவூர்

கும்பகோணத்தில் 14 கோயில்களில் குடமுழுக்கு

தினமணி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஒரே நாளில் 14 கோயில்களில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கும்பகோணத்தில் 2016ஆம் ஆண்டு பிப். 22-ம் தேதி மகாமகத் திருவிழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கும்பகோணத்தில் மகாமகத்துடன் தொடர்புடைய கோயில்களில் திருப்பணிகள் நடத்தப்பட்டு, குட

முழுக்கு விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகாமகம் தொடர்புடைய கோயில்களான காளகஸ்தீஸ்வரர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில், அபிமுக்தீஸ்வரர் கோயில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயில், ஆதிவராகப் பெருமாள் கோயில், இதர கோயில்களான பகவத் விநாயகர் கோயில், வட்டி பிள்ளையார் கோயில், யானையடி அய்யனார் கோயில், ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில், திரௌபதி அம்மன் கோயில், வரசித்தி விநாயகர் கோயில், கோடியம்மன் தட்சிணாமூர்த்தி கோயில், படைவெட்டி மாரியம்மன் கோயில் ஆகிய 14 கோயில்களில்

திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்தக் கோயில்களில் உள்ள கோபுரக் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT