தஞ்சாவூர்

சூலமங்கலம் ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

DIN

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டம்,சூலமங்கலம் ஊராட்சி சமுதாயக் கூட வளாகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்ரமணியன் தலைமை வகித்தார்.
மாவட்ட மலேரியா அலுவலர் போத்திப்பிள்ளை முன்னிலை வகித்தார். முகாமில் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள்,அவற்றை அழிக்கும் வழிமுறை,டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்,காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும் காய்ச்சல் கண்டால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்,சித்த மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டு நிலவேம்பு குடிநீர் பருகவும் அறிவுறுத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் நவீன்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன்,சுகாதாரஆய்வாளர் நாடிமுத்து மற்றும் சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் ஜெயகுமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT