தஞ்சாவூர்

சாந்தபிள்ளை கேட் மேம்பால முறைகேடு: போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் முடிவு

DIN

தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் மேம்பாலம் கட்டியதில் முறைகேடு நிகழ்ந்ததாக நெடுஞ்சாலைத் துறை அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இக்கட்சியின் மாநகர 43, 47-ஆவது வட்டக் கிளை மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாந்தபிள்ளை கேட் ரயில்வே மேம்பாலம் பழைய வரைபடத்தின்படி மீண்டும் புதுப்பித்து கட்டி விபத்தைத் தவிர்க்க வேண்டும். இப்பாலத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் செலவிடப்பட்ட தொகை
குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதில், முறைகேடுகளில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்புடைய அரசு
அலுவலகங்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவது, 43, 47, 51-ஆவது வார்டுகளில் புதை சாக்கடையில் ஏற்பட்ட உடைப்பால் சாலையில் கழிவு நீர் ஓடுவதை
சரிசெய்யாததை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் கழிவு நீர் ஊற்றும் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொறியாளர் ஆர். விக்னேஷ்வரன், கே.
மாரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் மாநகரப் பொறுப்பாளர் என். பாலசுப்பிரமணியன், மாநகரச் செயலர் எஸ்.எம். ராஜேந்திரன், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் ஆர்.கே.
செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT