தஞ்சாவூர்

அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 2 பேர் கைது; வாகனங்கள் பறிமுதல்

DIN

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கடந்த புதன்கிழமை ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மணல் அள்ளப் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை, பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 
இதைத்தொடர்ந்து அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பிரபாவதி மற்றும் போலீஸார் பசுபதிகோவில் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது பசுபதிகோவில் பகுதி குடமுருட்டி ஆற்றில் இருந்து மணல் அள்ளிவந்த ஒரு லோடு ஆட்டோவை மடக்கி விசாரித்தனர். விசாரணையில், அனுமதியின்றி ஆற்றில் இருந்து மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதனையடுத்து லோடு ஆட்டோவை ஓட்டிவந்த நாடார் தெற்கு தெருவைச் சேர்ந்த துரைசாமி மகன் சிவகுமார்(21) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், ஆட்டோவைப் பறிமுதல் செய்தனர். இதேபோல் மாத்தூர் அருகே அனுமதியின்றி குடமுருட்டி ஆற்றில் இருந்து மணல் அள்ளிவந்த மாத்தூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் (38) என்பவரை வழக்கு பதிந்து கைது செய்தனர். மாட்டு வண்டியைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT