உளுந்து சாகுபடி குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி
மதுக்கூர் வடக்கு கிராமத்தில் உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறுவதற்கு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மதுக்கூர் வடக்கு கிராமத்தில் உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறுவதற்கு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயறுவகை பயிர்களில் கூடுதல் வருமானம் பெறுவதற்கு கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுக்கூர் வட்டார வேளாண்மை அலுவலர் நவீன்சேவியர் பங்கேற்று, உளுந்து சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார்.
இம்முகாமில், மதுக்கூர் வேளாண்மை துணை அலுவலர் கலைச்செல்வன், வேளாண்மை உதவி அலுவலர் அன்புமணி, அட்மா திட்ட அலுவலர் சரவணி ஆகியோர் கலந்து கொண்டனர்.