முகப்பு
தஞ்சாவூர்

சப்த மாதர்கள் கோயிலில் அஷ்டமி சிறப்பு வழிபாடு

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்தில் உள்ள சப்த மாதர்கள் கோயிலில் அஷ்டமி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்தில் உள்ள சப்த மாதர்கள் கோயிலில் அஷ்டமி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் உள்ள கற்பக கணபதி, வீரபத்திரர், சாமுண்டி, மகேந்திரி, வாராகி, வைஷ்ணவி, கௌமாரி, மகேஸ்வரி, பிராம்மி உள்ளிட்ட சப்த மாதர்களுக்கு பால், தயிர், தேன், பழரசம், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், புது வஸ்திரம் அணிவித்து, மலரலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்படுகளை வாராகி வழிபாட்டு குழுத் தலைவர் வி.பி.கே.மூர்த்தி, செயலாளர் ஆர்.பாலசுந்தரம், பொருளாளர் வாய்மை ஆர்.உமாபதி, பி.கே.ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →