முகப்பு
தஞ்சாவூர்

உணவு வணிகர்கள் உரிமம் பெற நாளை சிறப்பு முகாம்

புதுக்கோட்டையில் உணவு வணிகர்கள் உரிமம், சான்றிதழ் பெற வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

புதுக்கோட்டையில் உணவு வணிகர்கள் உரிமம், சான்றிதழ் பெற வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை வர்த்தகக் கழக வெள்ளி விழா அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், மாவட்டத்தில் உணவகங்கள், உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் தங்களின் புகைப்படம், அடையாள ஆவணங்களை எடுத்துச் சென்று விண்ணப்பிக்கலாம்.
ரூ. 12 லட்சத்திற்கும் கீழ் வணிகம் செய்வோர் பதிவுச்சான்றிதழ் பெற ரூ.100-ம், ரூ.12 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்வோர்  ரூ. 2000 செலுத்தியும் உரிமம் பெறலாம்.  மாவட்ட நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபு இதைத் தெரிவித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →