தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலை.யில் இலங்கை மாணவர்களுக்குச் சங்க இலக்கியப் பயிற்சி

DIN

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர்களுக்குச் சங்க இலக்கிய அறங்கள் என்ற தலைப்பிலான 10 நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ்ப் பட்டப்படிப்புப் பயிலும் 15 மாணவிகள், 3 மாணவர்கள் என மொத்தம் 18 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் 3 பேராசிரியர்கள் வந்துள்ளனர். இதுகுறித்து இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் வ. மகேஸ்வரன் தெரிவித்தது:
எங்களது பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ்ப் பட்டப்படிப்பில் மூன்றாமாண்டு,  நான்காமாண்டில் (இலங்கையில் இளங்கலைப் பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகள் கொண்டது) சங்க இலக்கியம் தொடர்பாக தலா ஒரு தாள் உள்ளது. எங்களது பல்கலைக்கழகத்தில் சங்க இலக்கியம் குறித்து கற்பித்துள்ளோம். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சங்க இலக்கியம் தொடர்பான விற்பன்னர்கள் உள்ளனர். இவர்களிடம் சங்க இலக்கியம் குறித்து ஆழமாகக் கற்றுக் கொள்வதற்காக மாணவர்கள் இங்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு இதேபோல 15 மாணவர்கள் இங்கு வந்து கற்று பயனடைந்தனர் என்றார் மகேஸ்வரன்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கத்தின் தொடக்க விழாவில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி. பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார், அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பாண்டி, தமிழ்ப் பல்கலைக்கழக வளர்தமிழ்ப் புலத் தலைவர் செ. சுப்பிரமணியன், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவர் இரா. குறிஞ்சி வேந்தன்,  பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் சா. உதயசூரியன்,  இணைப் பேராசிரியர்கள் உ. பிரபாகரன், ஞா. பழனிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT