பாபநாசம் அருகே இரு கார்களில் ஆயுதங்களுடன் புதன்கிழமை பிற்பகல் வந்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அம்மாபேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பத்மநாபன் உள்ளிட்ட காவலர்கள் அப்பகுதியில் புதன்கிழமை பிற்பகல் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, மகிமாலை கிராமத்தில் வெண்ணாற்றின் தென் கரையில் இரு கார்கள் நின்றன. அக்கார்களில் வந்தோர் அவ்வழியே செல்வோரை மறித்து பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸார் இரு கார்களிலும் மேற்கொண்ட சோதனையில் 8 வீச்சரிவாள்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் அவர்கள் அவர்கள் வலங்கைமானில் பிரபல நபரை கொல்ல வந்திருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக வலங்கைமானை சேர்ந்த ஜெ. ஜெயராஜ் (36), ஆர். அருண்பாண்டியன் (25), எஸ். முத்தையன் (30), ஜி. கார்த்திகேயன் (37), திருச்சியைச் சேர்ந்த எஸ். ராஜ்கமல் (30), ஜெ. ஆனந்த் (42), அரியமங்கலத்தைச் சேர்ந்த கே. வினோத் (31), ஒரத்தநாடு அருகேயுள்ள பொன்னாப்பூரைச் சேர்ந்த பாபு (25) ஆகியோரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.