தஞ்சாவூர்

ஆதார் புகைப்படம் எடுப்பதில் தாமதம்: பொதுமக்கள் மறியல் முயற்சி

DIN

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கு  புகைப்படம் எடுக்க பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலுக்கு முயன்றனர்.
பேராவூரணி வட்டத்தில் ஊமத்தநாடு, உடையநாடு, சொர்ணக்காடு, ஆதனூர், பெருமகளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கு முழுமையாக ஆதார் அட்டை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, வங்கி கணக்கு தொடங்குதல், பாஸ்போர்ட் எடுத்தல், சமையல் எரிவாயு மானியம் பெறுதல், அங்காடிகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறுதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இதனால், ஆதார் அட்டை எடுக்க வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பலமுறை வந்து காத்திருந்தும் புகைப்படம் எடுப்பதில் தாமதமாவதோடு திரும்ப திரும்ப அலைக்கழிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100 பேர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சேதுபாவாசத்திரம் சாலையில் சாலை மறியல் செய்ய முயற்சித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வட்டாட்சியர் அலுவலகம் அழைத்துச் சென்றனர். திங்கள்கிழமை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுவிட்டதால் அலுவலகத்திலிருந்த துணை நிலை அதிகாரிகள் புகைப்படம் எடுக்க கூடுதலாக பணியாளர்கள் வரவழைக்க அதிகாரிகள் வந்தவுடன் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் பொதுமக்கள் மறியல் முயற்சியை கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT