தேசிய அளவிலான வண்ணம் தீட்டுதல் போட்டி: சிறப்பிடம் பெற்ற லாரல் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு
மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாதில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவில் மாணவர்களுக்கான கையெழுத்து மற்றும் வண்ணம் தீட்டுதல்
மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாதில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவில் மாணவர்களுக்கான கையெழுத்து மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவர் எஸ்.சுபதீஸ், 8ஆம் வகுப்பு மாணவி என். உதய ஸ்டெபி, 7ஆம் வகுப்பு மாணவர் கே.ராஜபூபதி ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். இவர்களுக்கு கலா கௌரவ் விருது-2017 என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இம்மாணவர்களுக்கு வழிகாட்டி ஆசிரியராக செயல்பட்ட பள்ளியின் ஓவிய ஆசிரியர் கேசவன் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றார்.
இதையொட்டி, தேசிய அளவில் சாதனை நிகழ்த்திய மாணவர்கள், இவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஓவிய ஆசிரியர் கேசவன் ஆகியோர் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டனர்.
விழாவுக்குப் பள்ளித் தாளாளர் வி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பாராட்டிப் பேசினார். இயக்குநர் எலிசபெத் தேவாசீர்வாதம், துணை முதல்வர் வி.பி. சந்திரசேகர், தலைமை ஆசிரியர் டி.ஆறுமுகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.