தஞ்சாவூர்

பேருந்து நிலையத்தில் இடையூறாக நின்ற பழ வண்டிகள் அகற்றம்

DIN

கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் சாலையோரம் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்த 50-க்கும் மேற்பட்ட பழ வண்டிகளை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்தினர்.
இப் பேருந்து நிலைய முன்புறம் 50-க்கும் மேற்பட்டோர் தள்ளுவண்டிகளில் பழ வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் சாலையோர இடத்தை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்து வந்தனராம்.
இந்நிலையில் கடந்த வாரம் இப் பேருந்து நிலையத்துக்குள் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை இடையூறாக இருந்த இப்பழ வண்டிகளை அப்புறப்படுத்த நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நகராட்சி ஆணையர் கே. உமாமகேஸ்வரி அறிவுரைப்படி நகரமைப்பு ஆய்வாளர்கள், நகராட்சி பணியாளர்கள் பழவண்டிகளின் ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றச் சென்றனர். இதையடுத்து தள்ளுவண்டி வியாபாரிகள் அங்கிருந்து தாங்களாகவே வேறிடங்களுக்கு சென்றுவிட்டனர். இந்த இடத்தில் பழ வண்டிகளில் வியாபாரம் செய்ய கூடாது, மீறினால் வண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துச் சென்றனர் நகராட்சியினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT