தஞ்சாவூர்

இலவச சிகிச்சை முகாம்கள் நடத்த இந்திய இயற்கை மருத்துவ கவுன்சில் முடிவு

DIN

அனைத்துப் பகுதிகளிலும் இலவச சிகிச்சை முகாம்கள் நடத்துவது என இந்திய இயற்கை மருத்துவ கவுன்சில் தீர்மானித்துள்ளது.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய இயற்கை மருத்துவ கவுன்சிலின் மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு இந்திய இயற்கை மருத்துவ கவுன்சிலின் தலைவர் எஸ். வெங்கடாசலம் தலைமை வகித்தார். தொடர்ந்து கவுன்சிலின் எதிர்கால செயல்திட்டம், சட்டரீதியான பாதுகாப்பு, மண்டல வாரியாக அமைப்பை ஏற்படுத்துவது குறித்து உரை நிகழ்த்தினார்.  கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இயற்கை மருத்துவம் குறித்த இலவச சிகிச்சை முகாம்கள் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் சங்கத்தின் பொருளாளர் கே. வெள்ளைச்சாமி, தேசியக் குழு உறுப்பினர் கா. அரங்கநாதன், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT