ஆலை பாதுகாவலரை தாக்கியவர் கைது
பாபநாசம், கபிஸ்தலம் காவல் சரகம், உமையாள்புரம் வடக்கு காமராஜர் காலனி தெருவை சேர்ந்த விவசாயி தெய்வீகன்(28).
பாபநாசம், கபிஸ்தலம் காவல் சரகம், உமையாள்புரம் வடக்கு காமராஜர் காலனி தெருவை சேர்ந்த விவசாயி தெய்வீகன்(28).
இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ராமன் (26). தனியார் சர்க்கரை ஆலை பாதுகாவலர். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டருகேயுள்ள இடம் தொடர்பாக இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தெய்வீகன், ராமனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
புகாரின் பேரில், கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து தெய்வீகனை புதன்கிழமை கைது செய்து, பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.