சமையல் பிரச்னையில் மனைவியை எரித்த கணவர் கைது
தஞ்சாவூரில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்சமையல் பிரச்னையில் மனைவியை எரித்த கணவர் கைது
தஞ்சாவூரில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூரில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் கீழவாசல் பூமால்ராவுத்தர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (28). கொத்தனார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் சுமதி (19) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. சுமதிக்கு சமையல் செய்யத் தெரியாதாம். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதேபோல், கடந்த 14-ஆம் தேதி வீட்டில் சமையல் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து சுமதி மீது ஊற்றி தீவைத்ததாகக் கூறப்படுகிறது. சுமதியின் அலறல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் காயமடைந்த அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்த தஞ்சாவூர் கிழக்கு காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, லட்சுமணனை புதன்கிழமை இரவு கைது செய்தனர்.