முகப்பு
தஞ்சாவூர்

"ஜெயகாந்தனின் எண்ணங்கள் விசாலமானவை'

எழுத்தாளர் ஜெயகாந்தனின் எண்ணங்கள் விசாலமானவை என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

எழுத்தாளர் ஜெயகாந்தனின் எண்ணங்கள் விசாலமானவை என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார்.
இப்பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற எழுத்தாளர் த. ஜெயகாந்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
எழுத்தாளர்களைப் பற்றி எண்ணும்போது நம் மனதுக்கு வருவது ஜெயகாந்தன்தான். மற்ற எழுத்தாளர்களுக்கும், ஜெயகாந்தனுக்கும் வேறுபாடு உள்ளது. ஜெயகாந்தனின் எண்ணங்கள் விசாலமானவையாக இருக்கும். மேலும், நடைமுறைக்கு என்ன சாத்தியமோ, அதை எடுத்துரைத்தவர் ஜெயகாந்தன்.
சமுதாயத்தில் நிகழும் செய்திகளை உலகத்துக்குக் கொண்டு செல்வதுதான் எழுத்தாளரின் கடமை. அதைச் சரியாகச் செய்தவர் ஜெயகாந்தன். இவரது எழுத்துகளில் அதிகமாகக் கருத்து மோதல்கள் இருக்கும். எனவே, இந்தக் கருத்து மோதல்களைப் போக்கத் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் மாணவர்களுக்கான வாசிப்போர் அமைப்புத் தொடங்க வேண்டும்.
அதில், ஒவ்வொரு வாரமும் ஜெயகாந்தனின் நூல்களில் உள்ள செய்திகளைத் திறனாய்வு செய்ய வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது நூல்களில் உள்ள கருத்துகள் மற்றும் எதிர்மறைக் கருத்துகள் தோன்றும் என்றார் பதிவாளர்.
முனைவர் துரை. சீனிச்சாமி சிறப்புரையாற்றினார். மொழிப் புலத் தலைவர் இரா. முரளிதரன் வாழ்த்தி பேசினார்.  முன்னதாக, துறைத் தலைவர் ஜெ. தேவி வரவேற்றார். பேராசிரியர் பெ. இளையாபிள்ளை நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →