முகப்பு
தஞ்சாவூர்

நாதன்கோவிலில் சிறப்பு திருமஞ்சனம், லெட்சுமி பூஜை

கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் மகாலெட்சுமி தாயாருக்கு சிறப்புத் திருமஞ்சனம், லெட்சுமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் மகாலெட்சுமி தாயாருக்கு சிறப்புத் திருமஞ்சனம், லெட்சுமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகள் 21-ல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோவில் ஷேத்திரமாகும்.   இங்கு செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதப் பெருமாள் கோயில் கொண்டுள்ளார்.
பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலம், நந்திக்கு சாபவிமோசனம் அளித்த புராண தலம், நந்தி பெயரிலேயே தீர்த்தம் ஆகிய சிறப்புகளைப் பெற்ற தலமாகும்.
பஞ்சாயுதபாணியாய் எழுந்தருளியிருக்கும் இப்பெருமானை திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளார்.  மேலும் மகாலெட்சுமி பிரார்த்தனை செய்து எட்டு அஷ்டமி விரதமிருந்து,  எட்டாவது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாகவும்  போற்றப்படுகிறது.
சிறப்பு பெற்ற இக்கோயிலில் மகாலெட்சுமி தாயார், பெருமாளிடம்  ஐக்கியமாக வேண்டும் என ஐப்பசி மாதம் அமாவாசையன்று வந்த  நாளாகும்.  பின்னர் தாயார் 8 நாள் செண்பகவல்லி மரத்தடியில் தபசு செய்து  பெருமாளின் திருமார்பில் ஐக்கியமானார்.
அதை முன்னிட்டு  மகாலெட்சுமி தபசு மேற்கொள்ள  வந்த நாளான  ஐப்பசி அமாவாசையான வியாழக்கிழமை, கோயிலில் தாயாருக்கு  சிறப்பு திருமஞ்சனம், லெட்சுமி பூஜை உள்ளிட்ட  பூஜைகள் நடைபெற்றன. ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →