ஏப். 11-இல் ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து ஓய்வூதியர்கள்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஏப். 11-ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏஐடியுசி அரசுப் போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஏப். 11-ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏஐடியுசி அரசுப் போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களைக் கைவிடக் கோரியும் தஞ்சாவூரில் ஏப். 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் அனைத்து துறை ஓய்வு பெற்றவர்களையும் பங்கேற்க அழைப்பது, கடந்த ஜனவரி மாதம் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களையும் புதிய ஊதிய உயர்வின் அடிப்படையில் இணைத்து உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.
வாரிசு பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களைக் கால தாமதம், எவ்வித நிபந்தனையும் இன்றி பணி வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் பி. அப்பாதுரை, ஏஐடியுசி மாவட்டச் செயலர்ஆர். தில்லைவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.