முகப்பு
தஞ்சாவூர்

கட்டடத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண் மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கட்டடத் தொழிலாளர்கள் கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:16 AM
பகிர்:

காவிரி மேலாண் மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கட்டடத் தொழிலாளர்கள் கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய கட்டடத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சங்கத்தின் மாநிலத் தலைவர் தி.கா. ராமஜெயம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே. மதிவாணன் முன்னிலை வகித்தார்.
இதில், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீரில்லாத நிலை இருப்பதால் பொதுமக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். எனவே, மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றத்தை மதிக்காத மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் எஸ். கலியமூர்த்தி, கும்பகோணம் நகரத் தலைவர் கே. குமார், நகரச் செயலாளர் ஏ. ஆனந்தன் மற்றும் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், வலங்கைமான் வட்டங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.