கவிஞர் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி
பட்டுக்கோட்டையில் அண்மையில் மறைந்த கவிஞர் பழநி ஜெயசந்திரன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மருத்துவர் மு.செல்லப்பன் தலைமை வகித்தார்.
பட்டுக்கோட்டையில் அண்மையில் மறைந்த கவிஞர் பழநி ஜெயசந்திரன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மருத்துவர் மு.செல்லப்பன் தலைமை வகித்தார்.
ராஜப்பா, ஜி.கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கவிஞர் சௌரா அறிமுகவுரையாற்றினார்.
ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் எம்.சந்திரசேகர் மறைந்த கவிஞர் பழநி ஜெயசந்திரனின் உருவப் படத்தை திறந்து வைத்துப் பேசினார். கவிஞர்கள் ந. மணிமுத்து, வா. சிங்காரவேலு, பெரமநாதன் ஆகியோர் கவிதாஞ்சலி செலுத்தினர்.
விழாவையொட்டி, கவிஞர் பழநி ஜெயசந்திரன் எழுதிய கவிதைகள் தொகுப்பு நூலை கவிஞர் கோட்டை அம்பிதாசன் வெளியிட, போக்குவரத்து தொழிற்சங்கப் பொதுச்செயலர் ஜெ. லெட்சுமணன் பெற்றுக் கொண்டார்.
டாக்டர் எஸ். பாலகிருஷ்ணன், அ.த. பன்னீர்செல்வம், டி. தனபால், சிவ. சிதம்பரம், வைகறை, பாரி. கணேசன், கு. பொன்முடி, ஏ .சண்முகம் ஆகியோர் நினைவுரையாற்றினர்.
ஜெ .திலகபாரதி நன்றி கூறினார்.