பட்டுக்கோட்டை பள்ளிக்கு மனோரா ரோட்டரி உதவி
பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம் சார்பில் இங்குள்ள கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம் சார்பில் இங்குள்ள கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் கம்ப்யூட்டர் பிரிண்டர் ஸ்கேனர் ஜெராக்ஸ் இயந்திரம் ஆகியவற்றை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் தேர்வு கே. குணசேகரன், அனந்தகோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். ஜீவானந்தம் ஆகியோர் அளித்த ரூ. 50ஆயிரம் நன்கொடையில் வாங்கப்பட்ட 2 இயந்திரங்களையும் பள்ளிக்கு வழங்கி பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் கே. பாண்டியன் சிறப்புரையாற்றினார்.
லாரல் பள்ளித் தாளாளர் வி. பாலசுப்பிரமணியன் பள்ளியின் புரவலர் திட்டத்திற்கு ரூ. 10 ஆயிரம் நிதியை பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.ஜெயவீரபாண்டியன், பள்ளித் தலைமை ஆசிரியை எல். ராணி ஆகியோரிடம் வழங்கினார்.
மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.எஸ்.வீரப்பன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் பி.செல்வராஜ், ஏ. என்.ராஜேந்திரன், அ.பூவலிங்கம், எஸ்.ஜெ.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கச் செயலர் எஸ். சதீஷ்குமார், பொருளாளர் எஸ்.எம்.சி. தண்டாயுதபாணி, துணைத்தலைவர் லெட்சுமிராஜ், இணைச்செயலர் ஏ.ஆர்.வீராசுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை ஆர். கங்கா நன்றி கூறினார்.