முகப்பு
தஞ்சாவூர்

பெரியகோயில் எதிரே மனிதச் சங்கிலி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் பெரியகோயில் எதிரே டெல்டா மாணவர் இயக்கத்தினர்

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:16 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் பெரியகோயில் எதிரே டெல்டா மாணவர் இயக்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை மாலை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புப்படி மேலாண்மை வாரியத்தை அமைத்து கொடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு மார்ச் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. மத்திய அரசு கர்நாடகத் தேர்தலை கருத்தில் கொண்டு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தஞ்சாவூரில் டெல்டா மாணவர் இயக்கத்தினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியகோயில் எதிரே உள்ள நடைபாதையில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். இதில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல்கேஸ், ஸ்டெர்லைட் போன்றவற்றுக்கு எதிராக அட்டைகளை ஏந்திய படி நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.