முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே  மணல் கடத்திய லாரி பறிமுதல்

பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள காட்டாறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளி லாரி மூலம் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு  தொடர்ந்து புகார்கள் வந்தன. 

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:49 am IST
பகிர்:

பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள காட்டாறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளி லாரி மூலம் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு  தொடர்ந்து புகார்கள் வந்தன. 
இதையடுத்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சாந்தகுமார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள்  திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு, கோட்டாக்குடி கிராமத்தில் உள்ள அக்னியாறு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு அனுமதியின்றி ஆற்று மணலை அள்ளி ஏற்றிக் கொண்டிருந்த ஒரு லாரியையும், ஒரு பிக்-அப் வாகனத்தையும் வட்டாட்சியர் பறிமுதல் செய்தார். பின்னர் இரு வாகனங்களும் பட்டுக்கோட்டை  வட்டாட்சியர் அலுவலகத்துக்கு  கொண்டு சென்று நிறுத்தப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.