புதிய நிர்வாகிகள் தேர்வு
பட்டுக்கோட்டை வட்டார விடியோ, புகைப்படக் கலைஞர்கள் நலச் சங்க புதிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பட்டுக்கோட்டை வட்டார விடியோ, புகைப்படக் கலைஞர்கள் நலச் சங்க புதிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். செயலாளர் கோபு முன்னிலை வகித்தார். வன்மீகநாதன், நடனசபாபதி ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
புதிய தலைவராக ஆர்.சரவணன், துணைத் தலைவர்களாக மார்கண்டன், அமானுல்லா, செயலாளராக தென்னவன், துணைச் செயலாளர்களாக சரவணன், தென்னரசன், பொருளாளராக அம்புரோஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.