முகப்பு
தஞ்சாவூர்

விவசாயி அடித்து கொலை: தந்தை, மகன் கைது

பேராவூரணி அருகே விவசாயி அடித்துக் கொலை செய்ததாக தந்தை, மகன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

பேராவூரணி அருகே விவசாயி அடித்துக் கொலை செய்ததாக தந்தை, மகன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செல்லப்பிள்ளையார் கோவில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமையன்( 66). தனியாக வசித்து வரும் இவருக்கும், பக்கத்து வீட்டில் இவரது அக்கா மகன் ராமச்சந்திரன்( 50) குடியிருந்து வருகிறார். ராமையன் வீட்டை தனது பெயருக்கு எழுதித் தருமாறு ராமச்சந்திரன் தகராறு செய்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து ராமையனைத் தாக்கியதில் நிகழ்விடத்தில் உயிரிழந்தார். இதனைத் தடுக்க  முயன்ற தங்கராஜ் என்பவரை, ராமச்சந்திரன் மகன் பாலச்சந்திரன் ( 30) தாக்கியதில் காயமடைந்த அவர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரன், அவரது மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கைது செய்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →