தஞ்சாவூர்

பாபநாசத்தில் சிறை லோக் அதாலத்

DIN


பாபநாசம் கிளை சிறை வளாகத்தில் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சார்பில் சிறை லோக் அதாலத் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாபநாசம் நீதிமன்ற நீதிபதியும், பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவருமான எஸ்.ராஜசேகர் தலைமை வகித்து, பாபநாசம் கிளை சிறை உள்வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நீதிமன்றத்தில் பங்கேற்று சிறைக் கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதில், விசாரணைக் கைதிகளாக ஆறு மாதங்களுக்கு மேல் யாரேனும் சிறையில் உள்ளனரா எனவும், சிறையில் கைதிகள் எவ்விதம் நடத்தப்படுகின்றனர், மனித உரிமை மீறல் நடைபெறுகிறதா எனவும் கைதிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், விசாரணை கைதிகளில் யாரேனும் தங்களை பிணையில் எடுக்க வசதியில்லாமல் இருக்கும்பட்சத்தில் பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு அலுவலகத்தில் மனு கொடுத்து தேவையான இலவச சட்ட உதவிகளை பெறலாம் என்றார். பாபநாசம் கிளைச் சிறை கண்காணிப்பாளர் அன்பழகன், முதல்நிலை தலைமை காவலர் நாகராஜன், முதல் நிலை காவலர் தயாளன், இரண்டாம் நிலை காவலர்கள் குமார், மோகன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சட்டப்பூர்வ தன்னார்வலர்கள் ராஜேந்திரன், தனசேகர் உள்ளிட்டோர் செயதிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT