தஞ்சாவூர்

ஜெயராமன் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN

மீத்தேன் எதிர்ப்புப் போராளி பேராசிரியர் ஜெயராமன் மற்றும் போராட்டக் குழுவினர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் மற்றும் போராட்டக் குழுவினர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். காவிரி சமவெளிப் படுகையில் விவசாயத்தைப் பாழாக்கும், மக்களை அகதிகளாக்கும் மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன், நாகை, கடலூர் பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் உள்ளிட்ட அழிவுத் திட்டங்களை நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் எடுக்கிறோம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மறைமுகமாக ஓ.என்.ஜி.சி. மூலம் மீத்தேன் எரிவாயு எடுப்பதைக் கைவிட வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தார். 
தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் கோ. திருநாவுக்கரசு கண்டன உரையாற்றினார். ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், காவிரி சமவெளி பாதுகாப்புக் கூட்டமைப்பு கோ. ஜெயசங்கர், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைக் குழு உறுப்பினர் பழ. ராசேந்திரன், சமவெளி விவசாயிகள் சங்கம் சு. பழனிராஜன், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை மாவட்டச் செயலர் இரா. அருணாசலம், தமிழ்நாடு மாணவர் இயக்கம் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT