தஞ்சாவூர்

பணத்தை திருடிவிட்டு வீட்டுக்கு தீவைத்தவர் கைது

DIN

பாபநாசம் அருகே பணத்தை திருடிவிட்டு, வீட்டுக்கு தீவைத்த நபரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அகரமாங்குடி கிராமம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் டேனியல் கூலி தொழிலாளி. இவரது மனைவி எலிசபெத்ராணி (52).
டேனியல் வீட்டை பூட்டிவிட்டு அ ருகிலுள்ள மாதாகோவிலுக்கு சென்றிருந்தாராம். பின்னர் வந்து பார்த்தபோது அவரது வீடு தீப்பற்றி எரிந்து சேதமடைந்திருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே போலீஸார் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அகரமாங்குடி மாதாகோவில் தெருவை சேர்ந்த சின்னப்பர் (47) என்பதும், டேனியல் வீட்டினுள் நுழைந்து வீட்டிலிருந்த ரூ. 40 ஆயிரம் பணத்தை திருடிவிட்டு, பிறகு வீட்டுக்கு தீவைத்துவிட்டு சென்றதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சின்னப்பரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ரூ. 40 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT