தஞ்சாவூர்

போக்குவரத்துக்கு பாதிப்பு: மணல் குவாரியில் மாட்டுவண்டிகள் சிறைபிடிப்பு; மறியல்

DIN

கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் அள்ளி வரும் மாட்டு வண்டிகளால் கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி, திங்கள்கிழமை மாட்டு வண்டிகளை சிறைபிடித்து சிலர் மறியலில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் நீலத்தநல்லூர் அருகே மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அங்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு, கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு வண்டி ரூ. 2 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. மாட்டு வண்டிகள் நகரின் சாலைகளில் தொடர்ச்சியாக வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
சிறைபிடிப்பு...:இந்நிலையில் மக்கள் உரிமை பாதுகாப்பு கழகத்தின் பொதுச் செயலாளர் பாத்திமா தலைமையிலான அமைப்பினர், திங்கள்கிழமை நீலத்தநல்லூர் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று அங்கு மணல் அள்ள தடை உள்ளதாக கூறி, மணல் அள்ளிக் கொண்டிருந்த மாட்டுவண்டிகளை சிறைபிடித்து மறித்து நிறுத்தினர்.
மேலும், உயர்நீதி மன்ற உத்தரவினை மீறி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதாகவும், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டு தொடர்ச்சியாக வருவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் பாத்திமா தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடாஜலம், சுவாமிமலை காவல் ஆய்வாளர் ரேகாராணி ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம், கொள்ளிடம் ஆற்றில் தடை உத்தரவு இருக்கும்போது எப்படி மணல் அள்ளலாம் எனக் கூறி பாத்திமா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
காலையில் மணல் அள்ளத் தடை...
அப்போது, வட்டாட்சியர், மாவட்டஆட்சியரின் உத்தரவுபடிதான் மணல் அள்ளுவதாகவும், வாகன ஓட்டிகள் சிரமப்படுவதால், கொள்ளிடம் ஆற்றில் இனி காலையில் மணல் அள்ளப்பட மாட்டாது. முற்பகல் 10 மணிக்கு மேல்தான் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும் எனவும் வட்டாட்சியர் தெரிவித்தார்.
இதையடுத்து மணல் குவாரியில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT