திருப்பூந்துருத்தி ஆராதனை விழா தொடக்கம்
தஞ்சாவூர் அருகேயுள்ள திருப்பூந்துருத்தியில் ஸ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகளின் 272 ஆம் ஆண்டு ஆராதனை விழா, ஆராதனைக் குழுவின் 54-வது தரங்க இசை விழா புதன்கிழமை மாலை தொடங்கியது.
தஞ்சாவூர் அருகேயுள்ள திருப்பூந்துருத்தியில் ஸ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகளின் 272 ஆம் ஆண்டு ஆராதனை விழா, ஆராதனைக் குழுவின் 54-வது தரங்க இசை விழா புதன்கிழமை மாலை தொடங்கியது.
திருவையாறு ப்ரும்மஸ்ரீ நடராஜ கணபாடிகள் மற்றும் குழுவினரின் வேத பாராயணத்துடன் தொடங்கிய இந்த விழாவில் கல்யாணபுரம் ஜி. சீனிவாசன் குழுவினரின் நாகசுர நிகழ்ச்சி, மேலர்காடு ரவி பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நிகழ்ச்சி, திருவையாறு சகோதரர்கள் என். நரசிம்மன், என். வெங்கடேசனின் பாட்டு ஆகியவை நடைபெற்றன.
தொடக்க விழாவில் ஆராதனைக் குழுவின் துணைத் தலைவர் வி. விஸ்வஜித் காடேராவ், செயலர் நீலா ரவிச்சந்திரன், உதவிச் செயலர் சீனிவாச அப்பாராவ், பொருளாளர் பி. அனந்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வியாழக்கிழமை (பிப்.22) பிற்பகல் 3 மணிக்கு அரசு இசைக் கல்லூரி மாணவிகளின் தரங்க இசை நிகழ்ச்சி, 3.40 மணிக்கு தஞ்சாவூர் மைதிலி கண்ணன் மாணவ, மாணவிகளின் தரங்க இசை நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு சாலியமங்கலம் ஜி. ராமதாஸ் வீணை நிகழ்ச்சி, 6 மணிக்கு கோவிந்தபுரம் பாலாஜி பாகவதரின் ஸ்ரீவிட்டல் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி உபன்யாச நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு தஞ்சாவூர் வடிவுதேவி குழுவினரின் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நிறைவு நாளான வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை நாம சங்கீர்த்தன மணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு அக்ரஹாரம் வழியாக நாராயண தீர்த்த சுவாமிகளின் பிருந்தாவனத்தை அடைகிறது.
மாலை 4 மணிக்கு ஷேக் மகபூப் சுபானி, எஸ். காலிஷா பீவி, பெரோஸ்பாபு குழுவினரின் நாகசுர இசை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு கடையநல்லூர் ரகுநாத்தாஸ் மஹராஜ் உபன்யாச நிகழ்ச்சி, ஆஞ்சேநய உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.