முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி

பாபநாசம் ரயில் நிலையத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கும்பகோணம் ரயில்வே பாதுகாப்புப்படை, பாபநாசம் தூய பாஸ்டின்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

பாபநாசம் ரயில் நிலையத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கும்பகோணம் ரயில்வே பாதுகாப்புப்படை, பாபநாசம் தூய பாஸ்டின் மெட்ரிகுலேசன் பள்ளி,  புனித செபஸ்தியார் நடுநிலைப் பள்ளி, பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் உள்ளிட்டவை சார்பில் புதன்கிழமை பாபநாசம் ரயில் நிலையத்தில்  தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியையொட்டி,  ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் ஆல்பர்ட் தினகரன் தலைமையில்,  உதவி ஆய்வாளர் பி. மணிமாறன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெர்சிஆண்டனி,  ஜோஸ்பின் மேரி உள்ளிட்டோர் முன்னிலையில்  பள்ளி மாணவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ரயில் நிலைய வளாகம், நடை மேடை,  தண்டவாள பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றியும், பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்தியும் தூய்மை பணி மேற்கொண்டனர்.
மேலும்,  ரயில் பயணிகளிடம் பாபநாசம் வர்த்தகர் சங்க தலைவர்ஜி.குமார் தலைமையில், பாபநாசம் ரயில் நிலைய அதிகாரி ராஜ்குமார், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் டி.சரவணன் முன்னிலையில் தூய்மை, பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பி. தனபால்,  சரண்யா,  ஏ. ஆப்ரஹாம், ஆசிரியை சுகுணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் டி.சரவணன், வாசன் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →