தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் ஆய்வேடுகள் பிரிவு திறப்பு

DIN

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் ஆய்வேடுகள் பிரிவைத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் இரா. வெங்கடேசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை பல துறைகளில் மேற்கொள்ளப்பட்ட  முனைவர் பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற ஆய்வு மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வேடுகளின் எண்ணிக்கை 5,512. இந்த ஆய்வேடுகளை மற்ற மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாகத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் தனிப் பிரிவாக தொடங்கப்பட்டுள்ளது.   
இப்பிரிவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் இரா. வெங்கடேசன் கூறுகையில், இப்பிரிவு தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு மிகவும் முக்கியமானது. இந்த நல்ல வாய்பை வருங்கால ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.
இந்த விழாவில் துணைவேந்தர் க. பாஸ்கரன், பதிவாளர் ச. முத்துக்குமார், தமிழ் வளர்ச்ச்சித் துறை இயக்குநர் கோ. விஜயராகவன், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன், பாண்டி, சி. சுப்பிரமணியம், முனைவர் இரா. பாஸ்கரன், நூலகர் சி. வேல்முருகன், உதவி நூலகர் தி. சிவக்குமார், முதல் நிலை நூலகர் பா. சண்முகம் துணைப் பதிவாளர் கோ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்று: செங்கத்தில் வாழைகள் சேதம்

நெல் மூட்டைகள் தாா்ப்பாய்களை போட்டு மூடியிருக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

பண்ருட்டியில் வெள்ளரிப்பழம் விலை அதிகரிப்பு

மழை வேண்டி சிவனடியாா்கள் கிரிவலம்

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT