தஞ்சாவூர்

பட்டீஸ்வரம்  தேனுபுரீஸ்வரர் கோயிலில் முத்துப்பந்தல் விழா தொடக்கம்

DIN

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் முத்துப்பந்தல் விழா புதன்கிழமை தொடங்கியது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் நிகழாண்டு முத்துப்பந்தல் விழா புதன்கிழமை காலை திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் அளிக்கும் நிகழ்வுடன் தொடங்கியது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. ஜூன் 14 ஆம் தேதி காலையில் சுவாமிக்கு முத்துக்கொண்டை, முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் அளித்து படிச்சட்டத்தில் வீதியுலா வருதலும், அன்றிரவு மின் அலங்காரத்துடன் அழகிய முத்து திருஓடத்தில் திருஞானசம்பந்தர் வீதியுலாவும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 15 ஆம் தேதி காலை திருஞானசம்பந்தர் திருமடாலயத்திலிருந்து திருமேற்றழிகை, கைலாசநாத சுவாமி திருக்கோயிலுக்கு அழகிய முத்துப்பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும்,  தொடர்ந்து அங்கிருந்து திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு முத்துப்பல்லக்கில் அடியார்கள் புடைசூழ வந்து தரிசித்தலும் நடைபெறுகிறது. 
அங்கிருந்து தேனுபுரீஸ்வரர் வழங்கியருளிய அழகிய முத்துப்பந்தலில் திருஞான சம்பந்தர் காட்சியளித்து, தேனுபுரீஸ்வரரை வழிபடல் காட்சியும், அன்றிரவு ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் முத்துவிமானத்தில் காட்சியளித்தல், சுவாமியுடன் திருஞானசம்பந்தர் முத்துப்பந்தலில் திருவீதி வலம் வருதலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT