தஞ்சாவூர்

பாதி மொட்டை, ஒரு பக்க மீசையுடன் நீதிமன்றத்துக்கு வந்த இளைஞர்

DIN

காவல் துறையினர் தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி, இதை கண்டித்து தஞ்சாவூர் நீதிமன்றத்துக்குப் பாதி மொட்டைத் தலையுடனும், ஒரு பக்க மீசையுடனும் இளைஞர் செவ்வாய்க்கிழமை வந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகேயுள்ள நெம்மேலி வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (38). இவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு ஒன்றியச் செயலராக உள்ளார்.
இவர் தஞ்சாவூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தார். அப்போது, இவர் வலது பக்கத்தில் மொட்டை அடித்தும், வலது புற மீசையை எடுத்த நிலையிலும் இருந்தார். நீதிமன்றத்தில் ஆஜரான இவரை மீண்டும் ஜூலை 25-ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
பின்னர், வெளியே வந்த ஜெயக்குமார் தெரிவித்தது:
ஒரத்தநாடு அருகேயுள்ள சமயன்குடிகாடைச் சேர்ந்த விக்னேஷை  (22) தாக்கியதாக என் மீது ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிந்து பட்டுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனர். பின்னர், 12 நாட்கள் கழித்து ஜாமீனில் வெளியே வந்தேன். ஆனால், இந்த வழக்குப் பொய்யானது. இந்த வழக்கின் வாதியான விக்னேஷை எனக்கு யார் என்றே தெரியாது. எனவே, என் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவலர்களைக் கண்டித்தும், இந்தப் பொய் வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஒரு பக்கம் மொட்டை அடித்தும், மீசையை எடுத்தும் வந்தேன் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT