"காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்'
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது என்றார் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி.
தஞ்சாவூர்"காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்'
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது என்றார் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது என்றார் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி.
இதுகுறித்து தஞ்சாவூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
காவிரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்போதையை கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவை மன்னிப்பு கேட்க வைத்தார். அத்துடன் பல போராட்டங்களையும் நடத்தினார். தற்போது 14.75 டி.எம்.சி. தண்ணீரை இழந்து விட்டோம். அதை இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் எப்படி ஏற்றுக் கொண்டனர் எனத் தெரியவில்லை. காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி அனைத்து கட்சித் தலைவர்களை நிச்சயம் சந்திக்க மாட்டார். எனவே, அனைத்துக் கட்சி என்ற பெயரில் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது. இது ஒரு கண்துடைப்பு வேலை. ப. சிதம்பரம் சில நாள்களாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இதற்காகத்தான் அமலாக்கத் துறையும், வருமானவரித் துறையும் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்துள்ளன என்றார்
புகழேந்தி.