செம்பியவரம்பல் கிராமத்தில் நாளை மக்கள் குறைதீர் கூட்டம்
கும்பகோணம் வட்டம், செம்பியவரம்பல் கிராமத்தில் மார்ச் 2 ஆம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
கும்பகோணம் வட்டம், செம்பியவரம்பல் கிராமத்தில் மார்ச் 2 ஆம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செம்பியவரம்பல் கிராமத்தில் மார்ச் 2-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிறப்பு, இறப்பு சான்று, ஜாதி சான்று, குடும்ப அட்டை பெயர் திருத்தம், பட்டா பெயர் மாற்றம், முதல் பட்டதாரி சான்று போன்றவற்றிற்கான மனுக்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து கொடுத்து உடனுக்குடன் தீர்வு சான்றுகளை பெற்று கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை முகாமில் நேரில் கொடுத்து பயன்பெறலாம்.