முகப்பு
தஞ்சாவூர்

குக்கர் சின்னத்துக்கு தடை விதிக்கப்படவில்லை

குக்கர் சின்னத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை. மீண்டும் விசாரிக்கவே உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.

Updated On : 29 மார்ச், 2018 at 7:17 AM
பகிர்:

குக்கர் சின்னத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை. மீண்டும் விசாரிக்கவே உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
இதுகுறித்து தஞ்சாவூரில் புதன்கிழமை அவர் தெரிவித்தது: உச்ச நீதிமன்றத்தில் குக்கர் சின்னத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதை முக்கிய வழக்காக எடுத்துக் கொண்டு, அமர்வு அமைத்து விசாரித்து ஏப்.30-க்குள் தீர்ப்பு வழங்குமாறு தில்லி உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஆர்.கே. நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அவர்களைத் (அதிமுகவினர்) தோற்கடித்தோம். அடுத்த 3 வாரங்களுக்குள் எங்களது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க இருந்தது. இந்த அச்சம் காரணமாக அவர்கள் நீதிமன்றத்தை அணுகினர். தீர்ப்பு நகல் இன்னும் என் கைக்குக் கிடைக்கவில்லை. அதை முழுமையாகப் படித்த பிறகுதான் மேலும் விவரங்கள் தெரியவரும் என்றார் தினகரன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.