பேராவூரணியில் ரோட்டரி ஆளுநர் வருகை
பேராவூரணியில் ரோட்டரி சங்க ஆளுநர் வருகை விழா புதன்கிழமை நடைபெற்றது.
பேராவூரணியில் ரோட்டரி சங்க ஆளுநர் வருகை விழா புதன்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி தலைவர் கே.பி.எல். ரமேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு, துணை ஆளுநர் பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் நலிவுற்ற பிரிவினருக்கு சலவைப் பெட்டி வழங்கப்பட்டது. முன்னதாக ரயிலடி அருகே ரோட்டரி சங்கம் சார்பில் பராமரிக்கப்படவுள்ள செயற்கை நீரூற்று பூங்காவை மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு திறந்து வைத்து, பராமரிப்பாளர் வாசுவை பாராட்டி சால்வை அணிவித்தார். நிகழ்ச்சியில் செயலர் ஏ. சுப்பிரமணியன், நிர்வாகிகள் நாகராஜன், சுப்பிரமணியன், கெளதமன், தனம் நீலகண்டன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.