முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் சுகாதார வளாகத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி ஜோசியர் தெரு மந்திரி சந்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

Updated On : 15 மே, 2018 at 4:09 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி ஜோசியர் தெரு மந்திரி சந்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்காக நகராட்சி சார்பில் அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
இதற்காக நகராட்சியிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு, நாள்தோறும் துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால், நாளடைவில் மந்திரி சந்தின் சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர், சுத்தம் செய்வதற்கு துப்புரவு தொழிலாளர்களும் வருவதில்லை. இதனால் இங்குள்ள சுகாதார வளாகம் துர்நாற்றம் வீசியபடியும், கொசுக்கள் உற்பத்தியாகும் கூடாரமாகவும் விளங்குகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை நகராட்சி அதிகாரிகள் திடீரென மந்திரி சந்தில் உள்ள சுகாதார வளாகத்தை இடிக்க வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அப்பகுதி மக்கள் , சுகாதார வளாக கட்டடத்தை இடிக்க கூடாது என்றும், அதை சீரமைத்துத் தர வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இருப்பினும், நகராட்சி அதிகாரிகள், சுகாதார வளாகத்தை இடிக்க முயன்றதால், அப்பகுதி மக்கள் சுகாதார வளாகத்தை இடிக்க விடாமல், அந்தக் கட்டடத்தின் மேல் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நகராட்சி அதிகாரிகள் சுகாதார வளாகத்தை இடிப்பதை கைவிட்டு திரும்பி சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.