தஞ்சாவூர்

நாதன்கோவிலில் மகா அஷ்டமி பெருவிழா

DIN

கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோயிலில் துலா உற்ஸவத்தையொட்டி மகா அஷ்டமி பெருவிழா புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் சுக்லபட்ச அஷ்டமி மகா அஷ்டமி பெருவிழாவாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை மாலை முதல்கால யாகசாலை பூஜைகளும், சிறப்பு யாகமும் நடைபெற்றது. பின்னர் பூர்ணாஹூதி தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து,  2ஆவது நாளாக  வியாழக்கிழமை மகா அஷ்டமியையொட்டி  ஸ்ரீசூக்த ஹோமம்,  சுதர்சன ஹோமம்,  மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மகா திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஜெகநாத பெருமாள் கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT