தஞ்சாவூர்

ஹெக்டேருக்கு ரூ. 50 ஆயிரம் பயிர் இழப்பீடு தேவை: விவசாய சங்கம்

DIN

கஜா புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு  வழங்க வேண்டும் என திருவோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருவோணம் வட்டார விவசாய நலச்சங்கக் கூட்டம் ஒன்றியத் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது.  ஒன்றியச் செயலர் வி.கே. சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் திருவோணம் பகுதியில் 48 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் 2.500 ஹெக்டேரில் தென்னை சாகுபடியும், 8100 ஹெக்டரில் நெல் சாகுபடியும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஏற்பட்ட கஜா புயலால் லட்சக்கணக்கான தென்னைகள், தேக்கு மரங்கள் , பாலா மரங்கள், புளிய மரங்கள் காற்றில் விழுந்து சேதமாயின. 
திருவோணம் ஒன்றியத்தில் உள்ள சுமார் 20 ஆயிரம் வீடுகளில்  15 ஆயிரம் வீடுகள் கஜா புயலால் பலத்த சேதமடைந்தன.  இந்நிலையில் அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை வெறும் கண்துடைப்பாக உள்ளது. விவசாயப் பயிர்களுக்கு இழப்பீடு தொகையாக ஹெக்டேருக்கு ரூ. 50 ஆயிரமும், பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரமும், பாதிக்கப்பட்ட ஓட்டு வீடு,கூரை வீடுகளுககு தலா ரூ. 50 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும், மின் இணைப்பை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளான பால், உணவு, மெழுகுவர்த்தி,பிஸ்கட், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசு அதிகாரிகள் உடனடியாக வழங்க வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டை முதல்வர் போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT