முகப்பு
தஞ்சாவூர்

சேவாலயா சார்பில் காந்தி பிறந்த நாள்

தஞ்சாவூர் மைய சேவாலயா அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தியின் 15 ஆவது பிறந்தநாள் விழா தஞ்சாவூரில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 22 அக்டோபர், 2018 at 9:31 AM
பகிர்:

தஞ்சாவூர் மைய சேவாலயா அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தியின் 15 ஆவது பிறந்தநாள் விழா தஞ்சாவூரில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட திருவடிக்குடில் சுவாமிகள் அருளுரை வழங்கினார். தஞ்சாவூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வே. சித்ரா சேவாலயாவின் சேவைகளை வாழ்த்தினார்.
முன்னதாக, தஞ்சாவூரில் உள்ள 8 அரசுப் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டியும், அரசு செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும் நடைபெற்றது.  திருவடிக்குடில் சுவாமிகள், தஞ்சாவூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வே. சித்ரா ஆகியோர் பரிசளித்து பாராட்டினர்.  
சேவாலயா நிறுவனர் வா. முரளிதரன் வரவேற்று,  சேவாலயாவின் சேவைகளை விவரித்தார். ஆலோசகர் கி. முத்துராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.