எப்போது தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க. வெற்றி பெறும்
எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும் என்றார் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும் என்றார் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: மக்கள் மத்தியில் அ.ம.மு.க. பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது. இக்கட்சி மீதுதான் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இந்த நிலைமைதான் உள்ளது. எனவே எப்போது தேர்தல் வந்தாலும், அ.ம.மு.க. மாபெரும் வெற்றி பெறும். அதனால்தான் துணை முதல்வர் பன்னீர்செல்வம் விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்போல பேசி வருகிறார்.
கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் செல்லவில்லை. காவிரி நீர் கடலில் கலந்து வீணாகிறது. தூர்வாருவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 400 கோடி என்ன ஆனது என தெரியவில்லை என்றார் தினகரன்.