தென்னை விவசாயிகளுக்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் இரா.துரைக்கண்ணு
தென்னை விவசாயிகளுக்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார் மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு.
தென்னை விவசாயிகளுக்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார் மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு.
பட்டுக்கோட்டை வட்டம், காசாங்காடு சமுதாயக் கூடத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக தென்னை தின விழாவில் மேலும் அவர் பேசியது:
தமிழக முதல்வர் தென்னை விவசாயிகள் பயன் பெறும் வகையில் நீரா பானம் உற்பத்திக்கு அனுமதியளித்து, அதற்கென ஒரு தனி பிரிவையும் ஏற்படுத்தி உள்ளார். மேலும், கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யும்
விவசாயிகளின் நலன் கருதி கொப்பரை தேங்காயின் விலை வீழ்ச்சியின்போது அரசே நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்தது. இதுபோல தென்னை விவசாயிகளுக்குத் தேவையான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
வேளாண் துறை மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் தென்னை வளர்ச்சி குறித்த திட்டங்களை விவசாயிகள் தெரிந்து கொண்டு அதை செயல்படுத்தி பயன் பெற வேண்டும் என்றார்.
முன்னதாக, தென்னை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் கண்காட்சியை அமைச்சர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப்
பார்வையிட்டார்.
விழாவுக்கு தஞ்சை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர், முன்னாள் எம்எல்ஏ பி.என்.ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐ.மகாலெட்சுமி, தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் ராஜீவ் பூஷன் பிரசாத், தென்னை வளர்ச்சி வாரிய துணை இயக்குநர் ஜெயபாண்டி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) ஜஸ்டின் மற்றும் ஏராளமான தென்னை விவசாயிகள் விழாவில் பங்கேற்றனர்.