தஞ்சாவூர்

கலை விழா போட்டிகள்: திருச்சி எம்.ஐ.இ.டி. கல்லூரி வெற்றி

DIN

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காம்பெஸ்ட் 2018 என்கிற கலை விழாப் போட்டிகளில் திருச்சி எம்.ஐ.இ.டி. கல்லூரி அதிகப் புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றது.
இப்போட்டிகளில் திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 18 கல்லூரிகளிலிருந்து 450-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 10 விதமான போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் திருச்சி எம்.ஐ.இ.டி. கல்லூரி அணி அதிகப் புள்ளிகள் பெற்று சுழற்கோப்பையை வென்றது.  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் டி. விக்டோரியா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வெற்றி பெற்றவர்களுக்குத் தொலைக்காட்சி நடிகர் நாஞ்சில் விஜயன் பரிசுகள் வழங்கினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT