தஞ்சாவூர்

டயாலிசிஸ் டெக்னீசியன் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

அரசுக் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற 3,500-க்கும் அதிகமான டயாலிசிஸ் டெக்னீசியன்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்நாடு டயாலிசிஸ் டெக்னீசியன் நலச் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசுக் கல்லூரிகளில் 2005 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3,500-க்கும் அதிகமான டயாலிசிஸ் டெக்னீசியன்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசு தவறிவிட்டதால், பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, டயாலிசிஸ் டெக்னீசியன்களை உடனடியாகப் பணியமர்த்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் தமிழகம் முழுவதும் வெறும் 6 பேர் மட்டுமே நிரந்தர டயாலிசிஸ் டெக்னீசியன்களாக பணியில் உள்ளனர். நோயாளிகளுக்குச் சரியான சிகிச்சை கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதை அரசு உடனடியாகக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீசியன்கள் இல்லாமலேயே டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவுகள் நடைபெறுகின்றன. இது நோயாளிகளின் நலன்களுக்கு எதிரானது. 
இந்திய மருத்துவ கவுன்சில் விதியின்படி மூன்று டயாலிசிஸ் இயந்திரத்துக்கு ஒரு டெக்னீசியன் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால், அந்த விதிமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் டெக்னீசியன்களை உடனடியாக நியமிக்க வேண்டும். 
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீசியன்களை பணி அமர்த்தாமல், இதர பணியாளர்களுக்கு 25 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பயிற்சி அளித்து, அவர்களை டயாலிசிஸ் செய்யும் பணியில் ஈடுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலர் ஜி.ஆர். ரவீந்திரநாத் தலைமை வகித்தார். மருத்துவர் ஏ.ஆர். சாந்தி, லேப் டெக்னீசியன் கல்வி நலச் சங்கத் தலைவர் பா. காளிதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT