தஞ்சாவூர்

வருவாய்த் துறையில் காலிப் பணியிடம் நிரப்ப வலியுறுத்தல்

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய வட்டங்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து அலுவலர்களும் நேரடியாகச் சென்று இரவு, பகல் பார்க்காமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். இப்பணி பார்த்த அனைவருக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்க வேண்டும். 
அரசால் அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள் பெரும்பாலானவை வருவாய்த் துறையால் மக்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. 
அத்திட்டப் பயன்கள் பயனாளிக்கு விரைவாகச் சென்றடைய மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மைப் பணி பார்ப்பதற்கு வட்ட அலுவலகங்களில் துணை வட்டாட்சியர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வர் பணியிடங்களைப் புதிதாகத் தோற்றுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். தங்க பிரபாகரன் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர்கள் எஸ். யுவராஜ், க. மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT