தஞ்சாவூர்

திருவையாறில் நாளை எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவையாறு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர்க்கும்

DIN

திருவையாறு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:
திருவையாறு வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.
திருவையாறு வட்டத்தில் உள்ள எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளைகளை நிரப்பப் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம்,  அரசு மானியம் வங்கிக் கணக்கில் வரவு 
வைத்தல் போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து,  எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்த  
இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, எரிவாயு இணைப்பு குறித்த தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் இக்கூட்டத்தில் மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT