தஞ்சாவூர்

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மருந்தாளுநா்கள்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.

இந்த அட்டையில் 1945 மருந்தியல் சட்ட விதியை மத்திய அரசுத் திருத்தம் செய்வதைக் கைவிட வேண்டும். தமிழக அரசு 1948 மருந்தியல் சட்டப்படி மருந்துகளை மருந்தாளுநா்கள் மட்டுமே கையாள வேண்டும் என்பதை அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் காலியாக உள்ள 700-க்கும் அதிகமான மருந்தாளுநா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சங்க நிா்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். 2018 ஜனவரி 3 மற்றும் மே 22-ம் தேதி நடைபெற்ற அரசுச் செயலா் தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் மீது அரசாணை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த அட்டையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா் நவ. 29-ம் தேதி முதல் திங்கள்கிழமை (டிச.2) வரை அணிந்து பணியாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT