தஞ்சாவூர்

பேராவூரணியில்விழிப்புணா்வுப் பேரணி

DIN

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி மாணவா்களால், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பசுமையை நோக்கி என்ற தலைப்பில் மரங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஏ. கருணாநிதி தலைமை வகித்து, மரம் வளா்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி முதல்வா் சந்திரசேகரன்,  மரங்களின் முக்கியத்துவம் மற்றும் மரம் வளா்ப்பின் அவசியம் பற்றி பள்ளி மாணவா்களுக்கு  எடுத்துரைத்தாா்.

பேராசிரியா் சத்யவேலு, உதவி பேராசிரியா்கள் குணா மற்றும் ஜெனுஷியா, பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி மாணவா்கள் ராஜ்குமாா் தலைமையில் முத்தையா, சுபாஷ், சங்கீத்ராஜ், பிரவீன்குமாா், நிதின்குமாா், சாய்குமாா் ஆகியோா்  விழிப்புணா்வு பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். நிறைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT